புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
ஐஐடி காந்திநகரில் என்எஸ்ஓ ஏற்பாடு செய்திருந்த "ஹேக் தி ஃபியூச்சர்" ஹேக்கத்தான் வெற்றிகரமாக நிறைவடைந்தது
प्रविष्टि तिथि:
24 MAR 2025 8:52AM by PIB Chennai
தேசிய புள்ளியியல் அலுவலகமானது குஜராத் காந்திநகரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து "ஹேக் தி ஃபியூச்சர்" என்ற தலைப்பில் 36 மணி நேர ஹேக்கத்தானை காந்திநகர் இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் இன்று வெற்றிகரமாக நிறைவு செய்தது.
இந்த நிகழ்ச்சியில் ஐஐடி, என்ஐடி, ஐடி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 18 அணிகள் பங்கேற்றன. அமைச்சகம் மற்றும் நிறுவனத்தின் வழிகாட்டிகள் மூலம் பங்கேற்பாளர்கள் தங்களுக்கு முன்வைக்கப்பட்ட மூன்று புதுமையான சவால்களை எதிர்கொண்டனர். தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் அமைச்சகத்தின் நிபுணர்களை உள்ளடக்கிய ஐந்து பேர் கொண்ட நடுவர் குழு உறுப்பினர்கள் முன்வைக்கப்பட்ட இறுதித் தீர்வுகளை மதிப்பீடு செய்தனர்.
நிறைவு விழாவில் மத்திய திட்ட அமைச்சகத்தின் செயலாளரும், தேசிய புள்ளியியல் அலுவலக தலைவருமான டாக்டர் சவுரப் கார்க் கலந்து கொண்டார்.
மூன்று பிரிவுகளில் முதல் மூன்று தீர்வுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சண்டிகரில் உள்ள பிளாக்ஷா பல்கலைக்கழகம் இரண்டு பிரிவுகளில் முதலிடத்தையும், ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் மற்றும் டெக்னாலஜி மற்ற பிரிவிலும் வென்றன. ஐ.ஐ.டி ஜம்மு, வி.ஐ.டி வேலூர் மற்றும் என்.ஐ.டி கோவா ஆகியவை அந்தந்த பிரிவுகளில் இரண்டாவது இடத்தையும், என்.எம்.ஐ.எம்.எஸ் மும்பை, ஐ.டி வதோதரா மற்றும் ஐ.ஐ.டி கரக்பூர் ஆகியவை அந்தந்த பிரிவுகளில் மூன்றாவது இடத்தையும் பெற்றன..
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114242
***
TS/IR/RR/KR
(रिलीज़ आईडी: 2114301)
आगंतुक पटल : 55