கலாசாரத்துறை அமைச்சகம்
இன்டாக் அமைப்பின் தலைவராக திரு அசோக் சிங் தாக்கூர் தேர்வு
Posted On:
22 MAR 2025 6:40PM by PIB Chennai
கலை - கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையான இன்டாக்-கின் (INTACH) ஆண்டுக் கூட்டம், இன்று (22 மார்ச் 2025) புதுதில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திரு அசோக் சிங் தாக்கூர் மூன்று ஆண்டு காலத்திற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்டாக் (INTACH) என்பது இந்தியாவின் முதன்மையான பாரம்பரிய பாதுகாப்பு அமைப்பாகும். இது 1984-ம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி முறையாக நிறுவப்பட்டது. இது சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (1860) கீழ் தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட சங்கமாகும். சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், பாரம்பரியத்திற்கு புத்துயிர் அளித்தல், நமது மகத்தான கலை, பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவற்றை ஊக்குவித்தல் ஆகியவை இதன் பணியாகும். கலாசார, இயற்கை வளங்கள், மரபுரிமைகள், கலாசார புத்தாக்க செயல்பாடுகளுக்கு நிதி, தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை வழங்கும் அமைப்பாகவும் இது செயல்படுகின்றது. இன்டாக் சாசனம் 2004-ம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இந்தியாவில் பாரம்பரிய பாதுகாப்பிற்கு வழிகாட்டும் அடிப்படை ஆவணமாக செயல்படுகிறது. பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியின் தன்மையை அங்கீகரித்து, பாரம்பரியத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் சாசனத்தை மாற்றியமைக்கும் பணியில் இது தற்போது ஈடுபட்டுள்ளது.
***
PLM/KV
(Release ID: 2114061)