சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
புதுதில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் 49-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார்
Posted On:
21 MAR 2025 6:16PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா முன்னிலையில் புதுதில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) 49-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், "புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் ஒரு அளவுகோலை உருவாக்கியுள்ளது. இன்று பட்டம் பெறும் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நமது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதிலும், அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்வதிலும் முக்கிய பங்கு வகிப்பார்கள்", என்று கூறினார்.
எய்ம்ஸ் மருத்துவமனை இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெருமைக்குரிய வெற்றிக்கதை என்றும், நாடு முழுவதும் பின்பற்றத் தகுந்த முன்மாதிரி என்றும் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். “எய்ம்ஸின் பொறுப்பு சுகாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றைத் தாண்டி உள்ளது. ஒவ்வொரு பங்குதாரரின் குரலும் கேட்கப்படும், வளங்கள் நியாயமான முறையில் பயன்படுத்தப்படும் மற்றும் சிறந்து விளங்கும் ஒரு சூழலை வளர்ப்பது வரை இது நீண்டுள்ளது" என்று அவர் கூறினார்.
இன்று சுகாதாரச் சேவையில் உள்ள சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டிய குடியரசுத்தலைவர், சுகாதாரப் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால், எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது என்று வலியுறுத்தினார். இதன் விளைவாக, வயதான மக்கள் தொகை அதிகரித்து வருகிறது, இது இந்தத் துறையில் புதிய சவால்களுக்கு வழிவகுக்கிறது. அதேசமயம், நவீன காலத்தில் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்களுடன் மருத்துவத் தொழில் போராடி வருகிறது. "இந்த மறைக்கப்பட்ட நோயைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த" மனநலம் குறித்த விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்குமாறு புதுதில்லி எய்ம்ஸ் ஆசிரியர்களை அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, எய்ம்ஸ் போன்ற முதன்மைக் கல்வி நிறுவனத்தில் தாங்கள் பெற்ற திறமை, திறன் மற்றும் அறிவு ஆகியவற்றை நாட்டின் சுகாதார அமைப்பை திறம்பட மேம்படுத்த பயன்படுத்துமாறு மாணவர்களை ஊக்குவித்தார். "எய்ம்ஸில் நீங்கள் பயின்ற கல்வி, நீங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்க தேவையான அறிவு மற்றும் திறன்களை மட்டுமல்லாமல், பச்சாத்தாபம், ஒருமைப்பாடு மற்றும் சேவை ஆகியவற்றின் மதிப்புகளையும் உங்களுக்கு வழங்கியுள்ளது. மருத்துவத் தொழிலின் சிக்கல்களை நீங்கள் வழிநடத்தும்போதும், நீங்கள் சேவை செய்பவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும்போதும் இந்த முக்கிய மதிப்புகள் உங்கள் வழிகாட்டும் கொள்கைகளாக செயல்படும்" என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113793
***
RB/DL
(Release ID: 2113891)
Visitor Counter : 44