விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் (தன் தான்ய) வேளாண் திட்டத்தைச் செயல்படுத்துதல்

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAR 2025 4:56PM by PIB Chennai

2025-26 மத்திய பட்ஜெட்டில் பிரதமரின் தன் தான்ய வேளாண் திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்து இருந்தார். இத்திட்டம் குறைந்த உற்பத்தித்திறன், மிதமான பயிர் செறிவு மற்றும் சராசரிக்கும் குறைவான கடன் அளவுகோல்கள் உள்ள 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. வேளாண் உற்பத்தியை அதிகரித்தல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன்களைப் பெறுவதை எளிதாக்குதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113713  

***

TS/GK/RJ/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2113828) வருகையாளர் எண்ணிக்கை : 50
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali