பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விமானப்படை தளபதி பாராட்டு

Posted On: 21 MAR 2025 5:11PM by PIB Chennai

2025 மார்ச்  21, புதுதில்லி விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விழாவில், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங், தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய விமானப்படையின்  விளையாட்டு வீரர்களைக் கௌரவித்து பாராட்டினார். விமானப்படையைச் சேர்ந்த விளயாட்டு வீரர்கள் தேசிய / சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.    மொத்தம் 40 விளையாட்டு வீரர்கள் மற்றும் 11 அக்னிவீர்வாயு (விளையாட்டு) வீரர்கள்,இந்திய விமானப்படையின் ஏழு அணிகள், தேசிய சாம்பியன்ஷிப் / விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.

இந்திய விமானப்படை விளையாட்டு வீரர்களின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் செய்தி அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங், இந்திய விமானப்படை வீரர்களின் சாதனைகளுக்காகவும், விமானப்படையில் விளையாட்டு போட்டி கலாச்சாரத்தை ஊக்குவித்ததற்காகவும் அவர்களின் செயல்திறனை வெகுவாகப் பாராட்டினார். சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், விடாமுயற்சிமனஉறுதியை பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர்களுக்கு வலியுறுத்தினார்.

***

TS/SV/AG/DL


(Release ID: 2113827) Visitor Counter : 46


Read this release in: English , Urdu , Hindi