விவசாயத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்தின் செயல்பாடு 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                21 MAR 2025 4:59PM by PIB Chennai
                
                
                
                
                
                
                வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், அறிவியல் ரீதியில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும், தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டம் இரண்டு துணை திட்டங்களைக் கொண்டுள்ளது. முதல் திட்டத்தின்படி, மகரந்தச் சேர்க்கை மூலம் பல்வேறு பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடானது தேனீ வளர்ப்பு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாவது திட்டத்தின் கீழ் தேனீ வளர்ப்பு மேலாண்மைக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. வழிகாட்டு நெறிமுறைகளின்படி திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர்  தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113717 
***
TS/GK/RJ/DL
                
                
                
                
                
                (Release ID: 2113818)
                Visitor Counter : 40