விவசாயத்துறை அமைச்சகம்
விளை நிலத்தில் கரிம கார்பன் குறைவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2025 4:57PM by PIB Chennai
விளை நிலத்தில் கரிமக் கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கந்தகம், நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகியவற்றை அறிய விவசாயிகளுக்கு மண்வளம் குறித்த அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதுவரை மொத்தம் 24.84 கோடி மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக நுண்ணூட்ட உரங்கள், இயற்கை உரங்கள், மற்றும் உயிர் உரங்களை சரியான முறையில் பயன்படுத்த இந்திய உணவு இயக்கம் விவசாயிகளுக்கு வழிகாட்டுகிறது. சுய உதவிக் குழுவின் பரிந்துரைகள் குறித்து செயல்விளக்கம், பயிற்சி மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மண்ணின் தரத்தை மேம்படுத்த உரங்களின் சமச்சீர் பயன்பாடு குறித்து சுமார் 7 லட்சம் செயல்விளக்கங்கள், 93,781 விவசாயிகள் பயிற்சி திட்டங்கள் மற்றும் 7,425 விவசாயத் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
பாரம்பரிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. உற்பத்தி முதல் பதப்படுத்துதல், சான்றிதழ் மற்றும் தொகுப்பு அடிப்படையிலான அணுகுமுறையில் சந்தைப்படுத்துதல் வரை சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விநியோகச் சங்கிலியை உருவாக்க உதவுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113714
***
TS/GK/RJ/RR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2113811)
வருகையாளர் எண்ணிக்கை : 57