எஃகுத்துறை அமைச்சகம்
ஆர்.ஐ.என்.எல் நிறுவனத்தின் புதுப்பிப்பு திட்டத்திற்கு ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2025 1:54PM by PIB Chennai
ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் (ஆர்.ஐ.என்.எல்) நிறுவனமானது தனது செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், புதுப்பிப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் முன்னுரிமை பங்கு மூலதனமாக 11,440.00 கோடி ரூபாய் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப - பொருளாதார செயல்திறனை மேம்படுத்துதல், திறன் பயன்பாடு, செலவினங்களை பகுப்பாய்வு செய்தல் போன்றவற்றில் அந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இது தேசிய எஃகு கொள்கை, 2017-ன் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா இதனைத் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2113590)
TS/SV/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2113780)
வருகையாளர் எண்ணிக்கை : 52