இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மத்திய ஆசிய இளையோர் தூதுக்குழு 2025 மார்ச் 22 முதல் 28 வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளது
Posted On:
21 MAR 2025 2:41PM by PIB Chennai
சர்வதேச இளையோர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் 2025 மார்ச் 22 முதல் 28 வரை நடைபெறவுள்ள மூன்றாவது மத்திய ஆசிய இளையோர் தூதுக்குழு பயணத்தை வழிநடத்த மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் தயாராகி வருகிறது. இந்த முன் முயற்சி மத்திய ஆசிய நாடுகளான கஜக்ஸ்தான், கிர்கிஸ்தான், தஜிக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான தூதரக உறவுகளை வலுப்படுத்துதல், இளைஞர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கலாச்சாரப் பரிமாற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
100 உறுப்பினர்களைக் கொண்ட இந்த தூதுக்குழு, இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க, கல்வி ரீதியான, கலாச்சார சிறப்புகளை கண்டறிவது, இளம் தலைவர்களிடமும் முக்கிய பங்குதாரர்களிடமும் கலந்துரையாடுவது ஆகியவற்றில் ஈடுபடும்.
இந்தக் குழுவினர் தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஹூமாயூன் கல்லறை, கோவாவின் பாரம்பரிய இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு இந்தியாவின் கட்டிடக்கலை மற்றும் வரலாற்று பராம்பரியத்தை அறிந்துகொள்வார்கள்.
இந்தியாவின் தொழில்நுட்ப, ஆராய்ச்சி, தொழில்முனைவு முன்னேற்றத்தை கண்டறிய தில்லி ஐஐடி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடும் இந்தக் குழுவினர் கோவாவில் உள்ள தொழில் வர்த்தக சபை, கோவா மேலாண்மை கல்வி கழகம் ஆகியவற்றுக்கும் பயணம் செய்வார்கள்.
இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், தலைமைத்துவம், புதிய கண்டுபிடிப்பு ஆகியவை பற்றி அறிந்துகொள்ள மை பாரத் தொண்டர்களுடன் விவாதிப்பார்கள்.
இளைஞர்கள் மூலமான ராஜிய உறவுகளின் முக்கியத்துவம் பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள இந்தக் குழுவினர் வெளியுறவு அமைச்சர், கோவா மாநில ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து பேசுவார்கள்.
இந்தத் தூதுக்குழுவினரைக் கௌரவிக்கும் விதமாக விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113608
***
TS/SMB/SG/RR
(Release ID: 2113708)