ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: விசைத்தறி தொழிலாளர்களின் நலன்

Posted On: 21 MAR 2025 12:57PM by PIB Chennai

மத்திய அரசு, ஜவுளி அமைச்சகத்தின் மூலம், விசைத்தறி தொழிலாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட பல்வேறு நலன்களை உறுதி செய்யவும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. விசைத்தறித் தொழிலாளர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டம் 2003 ஜூலை 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, விசைத்தறி துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்குவதற்காக உரிய திருத்தங்களுடன் 2019-20 வரை நீட்டிக்கப்பட்டது. கூடுதலாக, இந்தத் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்கள் கூடுதலாக ஷிக்ஷா சஹாயோக் திட்டத்தின் அதிக பட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் ரூ.1,200 கல்வி மானியம் பெற தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு அதாவது ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.  2017-ம் ஆண்டு பிரதமரின்  ஜீவன் ஜோதி பீமா காப்பீட்டு திட்டம், பிரதமரின் சுரக்ஷா பீமா திட்டம்  ஆகியவற்றுடன் ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டிற்கான பலன்களை நீட்டிக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  பிரதமரின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது விசைத்தறி தொழிலாளர்கள் உட்பட தகுதியான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திட்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு 60 வயதிற்குப் பிறகு மாதந் தோறும் ₹ 3,000 ஓய்வூதியம் வழங்க வகைசெய்கிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா இதனைத் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2113555)

TS/SV/AG/RR


(Release ID: 2113696) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi , Marathi