ஜவுளித்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: புவிசார் குறியீடுடன் கூடிய பொருட்கள்
Posted On:
21 MAR 2025 12:55PM by PIB Chennai
தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம், தேசிய கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டம், ஆகியவற்றின் கீழ் முறையே நாடு முழுவதிலும் உள்ள கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கு சரக்குகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999-ன் கீழ் புவிசார் குறியீடு(ஜிஐ) வழங்குவதை மத்திய ஜவுளி அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வடிவமைப்பு, உற்பத்திப் பொருட்களைப் பதிவு செய்தல், செயல்படுத்தும் முகமைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், அடையாளப் பதிவினைத் திறம்பட அமுலாக்கம் செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை, மொத்தம் உள்ள 658 ஜிஐ குறியீட்டு பொருட்களில் 214 கைவினைப் பொருட்கள், 104 கைத்தறி உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்று சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், நெசவாளர்கள், கைவினைஞர்களுக்கு தங்களது பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், உள்நாட்டு, வெளிநாட்டு சந்தை நிலவரம் குறித்த நடைமுறைகள் குறித்தும் அறிந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருத்தரங்குகள், பயிலரங்குகள், பன்னாட்டு பொருட்காட்சிகள் / கண்காட்சிகள் ஆகியவற்றில் பங்கேற்பது உள்ளிட்ட சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு, சர்வதேச அரங்கில் புவிசார் குறியீடு கைத்தறி தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காக, பல்வேறு பிராந்தியங்களிலிருந்து புவிசார் குறியீட்டுடன் கூடிய கைத்தறி தயாரிப்புகளின் தனித்துவமான கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டவும் ஊக்குவிக்கவும், அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் கைவினைத்திறனை உலகளாவிய பார்வையாளர்களுக்கு நிரூபிக்க உதவிடும்வகையில் அண்மையில் இது தொடர்பான உச்சி மாநாடு நடத்தப்பட்டது. புவிசார் குறியீடு கொண்ட கைத்தறி நெசவாளர்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதும், நுகர்வோர் சந்தை நிலவரத்தையும், புவிசார் குறியீடு பெற்ற ரகங்களை வாங்குவோரிடையே விளம்பரப்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இந்த நிகழ்வில் புவிசார் குறியீடு அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள், வெளிநாட்டு வாங்குபவர்கள், உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவை பங்கேற்றன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா இதனைத் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2113550)
TS/SV/AG/RR
(Release ID: 2113688)
Visitor Counter : 22