எரிசக்தி அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் மின்சார அமைச்சகத் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம்
Posted On:
21 MAR 2025 1:27PM by PIB Chennai
மின்சார அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் கூட்டம் நேற்று புதுதில்லியில் நடைபெற்றது.
"தேசிய மின்சாரத் திட்டம் - பரிமாற்றம்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மத்திய மின்சார அமைச்சர் திரு மனோகர் லால் தலைமை தாங்கினார். மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் மின்சாரம் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக அமைச்சர் திரு மனோகர் லால் தெரிவித்தார்.
2023 முதல் 2032 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் சேர்க்கப்பட வேண்டிய மின் பரிமாற்ற அமைப்பின் விவரங்களை தேசிய மின்சாரத் திட்டம் வழங்குகிறது என்றும், இது நாட்டின் உற்பத்தித் திறன் மற்றும் மின்சாரத் தேவையின் வளர்ச்சிக்கு ஏற்ப அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல பரிந்துரைகளை வழங்கினர். நாட்டில் மின் பரிமாற்ற வலையமைப்பை விரிவுபடுத்துவதில் மின்சார அமைச்சகத்தின் முன் முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினர்.
மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளை இணைத்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் திரு மனோகர் லால் உத்தரவிட்டார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113571
***
TS/GK/RJ/RR
(Release ID: 2113675)
Visitor Counter : 22