ஜவுளித்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: பெண் நெசவாளர்கள்
Posted On:
21 MAR 2025 12:15PM by PIB Chennai
2019-20-ம் ஆண்டின் நான்காவது அகில இந்திய கைத்தறி கணக்கெடுப்பின்படி, மணிப்பூர் மாநிலத்தில் 2,11,327 பெண் நெசவாளர்கள் உள்ளனர்.
கைத்தறித் தொழிலில் பெண் நெசவாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களை ஊக்குவிக்கவும், வர்த்தகத்தை நிலைநிறுத்தவும், விரிவுபடுத்தவும், நாடு முழுவதும் உள்ள பெண் நெசவாளர்களுக்கு மத்திய ஜவுளி அமைச்சகம் கூடுதல் சலுகைகளை வழங்கி வருகிறது.
அவற்றில் கைத்தறித் தொழில் திட்டங்களின் கீழ், பெண் நெசவாளர்களைக் கொண்ட திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தறிக்கூடம் கட்டுவதற்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் / தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் / மகளிர்/ திருநங்கைகள் / மாற்றுத்திறனாளி ஆகிய நெசவாளர்களுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
சிறப்பாக செயல்படும் பெண் நெசவாளர்களுக்காக 2016-ம் ஆண்டு முதல், கமலாதேவி சட்டோபாத்யாய் விருது வழங்கப்படுகிறது.
இவை தவிர, (i) தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம், (ii) (ii) மூலப்பொருள் விநியோகத் திட்டம் போன்ற ஏனைய மத்திய அரசின் திட்டங்களை ஜவுளி அமைச்சகம் மணிப்பூர் மாநில பெண் நெசவாளர்கள் உள்ளிட்ட கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் கீழ், தகுதி வாய்ந்த கைத்தறி முகவர்கள் / நெசவாளர்களுக்கு மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யவும், மேம்படுத்தப்பட்ட தறிகள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல், சூரிய ஒளி விளக்கு அலகுகள் வாங்குதல், தறிக்கூடம் கட்டுதல், திறன் வளர்ப்பு, தயாரிப்பு, வடிவமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப, பொது உட்கட்டமைப்பு வசதிகள், சந்தைப்படுத்துதல் மற்றும் நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் சலுகை அடிப்படையிலான கடன்கள், சமூகப் பாதுகாப்பு போன்றவற்றிற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
இம்பாலில் உள்ள நெசவாளர் சேவை மையம் மணிப்பூரில் உள்ள கைத்தறி நெசவாளர்களின் திறன்களை மேம்படுத்துகிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா இதனைத் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2113533)
TS/SV/AG/RR
(Release ID: 2113569)
Visitor Counter : 23