குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற உதயம் உத்சவத்தை பார்வையிட்டார், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAR 2025 7:57PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள உதயம் உத்சவத்திற்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று சென்றார். கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் முதல் காதி பொருட்கள் வரை பல்வேறு தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தும் அரங்குகளை அவர் பார்வையிட்டார்.
எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் 2025, மார்ச் 20 முதல் 30 வரை குடியரசுத்தலைவர் மாளிகையில் "உதயம் உத்சவ்" நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது, இது நாடு முழுவதும் உள்ள எம்.எஸ்.எம்.இ.க்களின் உணர்வைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாகும், இது எம்.எஸ்.எம்.இ.களுக்கு அதிகாரம் அளிப்பதையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாரம்பரியம் & கைவினைப்பொருட்கள், கரிம & வேளாண் சார்ந்த தயாரிப்புகள், பசுமை எம்.எஸ்.எம்.இதொழில்நுட்பங்கள், பெண் தொழில்முனைவோர், பிரதமரின் விஸ்வகர்மா & பழங்குடி தொழில்முனைவோர், காதி & கிராமத் தொழில்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ வணிக ஆதரவு அரங்கு உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புப் பிரிவுகளைக் காட்சிப்படுத்தும் ஏழு அரங்குகள் இதில் இடம் பெற்றுள்ளன. ஹுனார் சங்கீத், நுக்கட் நாடகம், சேலை அணிதல் அமர்வுகள் மற்றும் ராஜஸ்தானி பொம்மை தயாரிப்பாளர்களின் செயல் விளக்கங்கள் போன்றவை நிகழ்விற்கு உற்சாகத்தை சேர்க்கும். மார்ச் 20 முதல் 30 வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கண்காட்சியை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2113404
***
RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2113448)
வருகையாளர் எண்ணிக்கை : 61