நிதி அமைச்சகம்
இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAR 2025 6:10PM by PIB Chennai
இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, ஏற்றுமதி மற்றும் பொருளாதார மாற்றங்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் அதிகரித்து வரும் பதற்றமான சூழல் மற்றும் புவிசார் அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் போன்றவை இருந்த போதிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவான நிலையில் உள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உலக அளவில் உள்ள வர்த்தகம் மற்றும் பொருளாதார சூழலில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் நிலைத்தன்மையைக் கொண்டுள்ளன என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இது நுகர்வு மற்றும் அரசின் செலவினங்களால் மேலும் வலுவடைகிறது. பணவீக்கம் விகிதம் கட்டுக்குள் உள்ளது. அரசின் கொள்கை முடிவுகள் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்து சந்தை நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.
சர்வதேச சந்தையில் நிலவும் சவால்களுக்கு மத்தியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வலுவாக உள்ளது.
2024-25 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5% ஆக இருக்கும் என்று தேசிய புள்ளியியல் துறை கணித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113316
---
TS/SV/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2113383)
வருகையாளர் எண்ணிக்கை : 112