தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ஜனவரி 2025-ல் 17.89 லட்சம் நிகர உறுப்பினர்கள் சேர்ப்பு

Posted On: 20 MAR 2025 3:34PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது 2025 ஜனவரி மாதத்திற்கான தற்காலிக சம்பள விவரம் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பில் 17.89 லட்சம் நிகர உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், பதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 11.48 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், ஆண்டுக்கு ஆண்டு  தரவுகளுடன் ஒப்பிடுகையில் 11.67 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.  இது அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள், தொழிலாளர்களின்  நலன்கள் குறித்த விழிப்புணர்வை எடுத்துக் காட்டுகிறது.

2025 ஜனவரி மாதத்தில் 8.23 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இந்த வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் இணைந்துள்ளனர். புதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தைக் காட்டிலும் 1.87% வளர்ச்சி கண்டுள்ளது. இது அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகள் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்  மேற்கொண்டு வரும் மக்கள் தொடர்பு திட்டங்களின் செயல்பாடுகளின் முக்கிய காரணிகளாகும்.

18 முதல் 25 வயதுக்குட்பட்ட புதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 4.70 லட்சமாக உள்ளது. இது 2025 ஜனவரியில் இணைந்துள்ள மொத்த புதிய சந்தாதாரர்களில் 57.07% ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113232   

-----

TS/SV/KPG/KR/DL


(Release ID: 2113348) Visitor Counter : 28