பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பெட்ரோலிய வளங்களை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
Posted On:
20 MAR 2025 3:36PM by PIB Chennai
ஐஎஸ்பிஆர்எல் நிறுவனம் மூலமாக அரசு பெட்ரோலிய இருப்பு வசதிகளை மூன்று இடங்களில் நிறுவியுள்ளது. மூன்று இடங்கள் விவரம்: (i) விசாகப்பட்டினம் (1.33 மில்லியன் மெட்ரிக் டன்), (ii) மங்களூரு (1.5 மில்லியன் மெட்ரிக்) மற்றும் (iii) படூர் (2.5 மில்லியன் மெட்ரிக் டன்). இந்த மூன்று இடங்களில் மொத்தம் 5.33 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இருப்பு வைக்கப்படும்.
தொழில்நுட்ப மற்றும் வர்த்தக சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் சேமிப்பு கொள்ளளவை அதிகரிப்பதற்கான வசதிகளை மத்திய அரசும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் அவ்வப்போது மதிப்பீடு செய்கின்றன. கூடுதல் கச்சா எண்ணெயை இருப்பு வைப்பதற்கான இடங்களை மதிப்பீடு செய்வது ஒரு தொடர் நடவடிக்கையாகும்.
கச்சா எண்ணெய் விநியோகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஒரே இடத்திலிருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் நிலையை சார்ந்திருப்பதை தவிர்க்கவும், இந்தியன் ஆயில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் இருப்பை பன்முகப்படுத்தி இருப்பதோடு மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்து வருகின்றன. மேலும், திரவ இயற்கை எரிவாயு இறக்குமதியை ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்து வருகிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113233
-----
TS/SV/KPG/KR
(Release ID: 2113265)
Visitor Counter : 26