விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: விண்வெளி தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி

प्रविष्टि तिथि: 20 MAR 2025 2:52PM by PIB Chennai

இந்திய தொழில்துறையை குறிப்பாக ஆரம்ப கட்ட விண்வெளி தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதை நோக்கி புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக தொழில்நுட்ப ஏற்பு நிதி திட்டத்தை இன்-ஸ்பேஸ்(இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அபிவிருத்தி மற்றும் அனுமதி அளிக்கும் மையம்) அறிமுகப்படுத்தியுள்ளது.

நிதியின் நோக்கம்:

தற்போதுள்ள விண்வெளி தொழில்நுட்பங்களை TRL-3/4 - லிருந்து TRL 7/8 (அல்லது அதற்கு மேற்பட்டது) வரை வணிகமயமாக்கலை நோக்கி மேம்படுத்துதல்.

புதுமையான தயாரிப்புகளின் வளர்ச்சி.

புத்தொழில் நிறுவனங்கள் நிதி ஆதரவுக்கு தகுதி பெறுவதற்கான அளவுகோல்கள்:

1.    இந்திய மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும்.

2.    தொடக்கத்தின் முன்மொழிவு சாத்தியமான வணிக மதிப்பைக் கொண்டிருக்கும்.

3.    புத்தொழில் நிறுவனம் வேறு எந்த மத்திய மற்றும் மாநில அரசு துறைகள் மற்றும் / அல்லது அமைச்சகங்களிடமிருந்து தங்கள் முன்மொழிவின் விளைபொருளை உருவாக்கும் திட்டத்திற்காக எந்த நிதியையும் பெறக்கூடாது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2113213)
TS/PKV/RR/KR


(रिलीज़ आईडी: 2113238) आगंतुक पटल : 40
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu