பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் இரண்டாவது திறந்த நிலை அமர்வை பெரு வணிக அமைச்சகம் நடத்தியது

Posted On: 20 MAR 2025 10:42AM by PIB Chennai

பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களை ஈடுபடுத்துவதற்கும் ஆதரிப்பதற்கும் தொடர்ச்சியான முயற்சியில், பெரு வணிக நிறுவன விவகார அமைச்சகம், அதன் இரண்டாவது வேட்பாளர் திறந்த நிலைப் பயிற்சி அமர்வை 2025  மார்ச்  19 அன்று நடத்தியது. விண்ணப்பதாரர்களின் கேள்விகள் மற்றும் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்து இருந்தது. ஒவ்வொரு வாரமும் இந்த திறந்த நிலை அமர்வுகளை நடத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் கேள்விகளுக்கு நிகழ்நேரத்திலேயே பதில்களைப் பெறுவார்கள்.

பயனுள்ள மற்றும் கவனம் செலுத்தும் விவாதங்களை உறுதி செய்ய, விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் வழியாகப் பகிரப்பட்ட ஒரு பிரத்யேக இணைப்பு மூலம் முன்கூட்டியே தங்கள் கேள்விகளை சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்பட்டனர். இது மதிப்பீட்டாளர்களுக்கு மிகவும் பொதுவான பிரச்சினைகளை தீர்த்து வைக்க உதவுகிறது. அதே நேரத்தில் அமர்வின் போது இடுகையிடப்பட்ட நேரடி கேள்விகளுக்கு பதிலளிக்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டது. இரண்டாவது திறந்தநிலை அமர்வுக்கு, 340 கேள்விகள் முன்கூட்டியே சேகரிக்கப்பட்டன. மார்ச் 10 அன்று தொடக்க அமர்வுக்கு பெறப்பட்ட 423 கேள்விகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113142

***

TS/PKV/RR/KR


(Release ID: 2113196) Visitor Counter : 22