ரெயில்வே அமைச்சகம்
வடகிழக்கு இந்தியாவில் ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பணியமர்த்தல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
Posted On:
19 MAR 2025 5:04PM by PIB Chennai
ஜோகிகோபா – குவஹாத்தி, இடையே பார்பேட்டா, சர்த்தபரி (136 கி.மீ.) வழியாக புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
மாநில அரசுகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் அமைச்சகங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ரயில்வே துறையின் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள ரயில்வே திட்டங்கள்/பணிகளுக்கான முறையான, முறைசாரா முன்மொழிவுகள்/கோரிக்கைகள்/ பரிந்துரைகள் பெறப்படுகின்றன.
ரயில்வே வாரியம், மண்டல ரயில்வே அலுவலகம்0கோட்ட அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள அமைப்புகள் மூலம் இத்தகைய முன்மொழிவுகள்/புகார்கள்/ஆலோசனைகள் பெறப்படுவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக இருப்பதால், அத்தகைய கோரிக்கைகளின் மையப்படுத்தப்பட்ட தொகுப்பு பராமரிக்கப்படுவதில்லை. இருப்பினும் இவற்றை ஆய்வு செய்து, சாத்தியமான நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன.
அசாம் மாநிலம் உட்பட வடகிழக்கு பிராந்தியத்தில் 2,499 கி.மீ தொலைவிற்கு புதிய ரயில் வழித்தடங்கள் அல்லது ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குவது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112850
***
TS/SV/SG/KR/DL
(Release ID: 2113036)
Visitor Counter : 20