உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ஆயுதக் காவல் படையினர் நலன்

Posted On: 19 MAR 2025 4:08PM by PIB Chennai

மத்திய ஆயுதப்படை காவல் படையினரின் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

  • மத்திய ஆயுத காவல் படைகள், அசாம் ரைபிள்ஸ், தேசிய பாதுகாப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணமில்லா மற்றும் காகிதமில்லா மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்காக ஆயுஷ்மான் சிஏபிஎஃப் 2021 ஜனவரி 23, அன்று தொடங்கப்பட்டது.
  • 41,79,361 ஆயுஷ்மான் சிஏபிஎஃப் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மத்திய ஆயுத காவல் படைகள் (சிஏபிஎஃப்) மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக மத்திய அரசு பல நலத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிகள் நிதி உதவி, கல்வி ஆதரவு, வீட்டுவசதி மற்றும் மறுவாழ்வு சேவைகளை உள்ளடக்கியது.

  • ஆயுஷ்மான் சிஏபிஎஃப்: இது ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் குறிப்பாக மத்திய ஆயுத காவல் படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகும். இது நாடு முழுவதும் இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணமில்லா மற்றும் காகிதமற்ற மருத்துவ சிகிச்சையை வழங்குகிறது
  • கருணைத் தொகை: பணியின் போது விபத்து காரணமாக துரதிர்ஷ்டவசமாக மரணம் ஏற்பட்டால், சிஏபிஎஃப் வீரர்களின்  வாரிசுதாரர்களுக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும். பயங்கரவாதிகளின் வன்முறை அல்லது எதிரிகளின் நடவடிக்கையின் போது ஏற்படும் இறப்புகளுக்கு, இழப்பீடு ரூ. 35 லட்சம் வழங்கப்படும்.
  • சிஏபிஎஃப் சம்பள தொகுப்பு திட்டத்தின் கீழ் விபத்து இறப்பு காப்பீடு பாதுகாப்பு: இந்தக் காப்பீடு பணியின் போது உயிர் இழக்கும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிதி ஆதரவை வழங்குகிறது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

***

TS/IR/RR/DL


(Release ID: 2113034)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi