கூட்டுறவு அமைச்சகம்
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களால் செயல்படுத்தப்படும் பிரதமரின் மக்கள் மருந்தகங்கள்
Posted On:
19 MAR 2025 3:02PM by PIB Chennai
நாடு முழுவதும் 2,744 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களை நிறுவ இந்திய மருந்துகள் துறை ஆரம்பகட்ட ஒப்புதலை அளித்துள்ளது. ஆரம்ப ஒப்புதலைப் பெற்ற 2,744 கடன் சங்கங்களில், 785 சங்கங்களுக்கு மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்களால் மருந்து உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் 716 தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கு கடை ஒதுக்கீட்டு எண்கள் வழங்கப்பட்டு, அவை செயல்பட தயாராக உள்ளன.
பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 2,047 தரமான அடிப்படை( ஜெனரிக்) மருந்துகளும், 300 அறுவை சிகிச்சைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இவை பிராண்டட் மாற்றுகளை விட 50% முதல் 90% வரை விலை குறைவாக உள்ளன. இது கிராமப்புற மக்களுக்கு சுகாதார சேவையை மிகவும் மலிவானதாக ஆக்குகிறது. அத்தியாவசிய மருந்துகளுக்கான அணுகலை மேம்படுத்துதல், சுகாதார செலவுகளைக் குறைத்தல், கிராமப்புற சமூகங்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களால் செயல்படுத்தப்படும் பிரதமரின் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2112726)
TS/PLM/AG/KR
(Release ID: 2112890)
Visitor Counter : 17