சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: பிஎம் ஏஜெஏஒய் திட்டத்தின் சாதனைகள்

Posted On: 19 MAR 2025 2:14PM by PIB Chennai

பிரதமரின் அனுசுசித் ஜாதி அப்யுதய் யோஜனா (PM-AJAY) எனப்படும் எஸ்சி பிரிவினரின் மேம்பாட்டுக்கான திட்டம் 2021-22 முதல் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதியுதவி திட்டமாகும். இத்திட்டம் (i) மாதிரி கிராமம்', (ii) எஸ்சி பிரிவு சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு மாவட்ட / மாநில அளவிலான திட்டங்களுக்கு மானிய உதவி வழங்குதல்' (iii) விடுதிகள் ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது

இத்திட்டத்தின் நோக்கங்கள்:

(i) எஸ்சி பிரிவு மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களில் போதுமான உள்கட்டமைப்பு  வசதிகளை மேம்படுத்துதல்.

(ii) கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் எஸ்.சி பிரிவு மக்களின் வறுமையைக் குறைத்தல்.

(iii) தரமான கல்வி நிறுவனங்களில் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தித் தந்து கல்வியறிவை அதிகரித்தல்.

2024-25 நிதியாண்டில், 4,928 கிராமங்கள் மாதிரி கிராமமாக அறிவிக்கப்பட்டு, 4,25,821 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ், 2021-22 முதல், 9,549 செயல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2,01,006 எஸ்சி பிரிவு பயனாளிகள் பயனடையும் வகையில் ₹1,219.80 கோடி மத்திய நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, இத்திட்டத்தின் கீழ் 69,212 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 866 விடுதிகள் அனுமதிக்கப்பட்டு, ₹936.27 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2112697)

TS/PLM/AG/KR


(Release ID: 2112884) Visitor Counter : 19