பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய குடிமைப்பணி கலாச்சார மற்றும் விளையாட்டு வாரியம், நான்காவது அரை மராத்தான் போட்டியை நடத்தியது; 1,072 பேர் பங்கேற்றனர்
प्रविष्टि तिथि:
19 MAR 2025 12:02PM by PIB Chennai
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் உள்ள மத்திய குடிமைப்பணி சேவைகள் கலாச்சார மற்றும் விளையாட்டு வாரியம், இந்திய இளைஞர் விடுதி சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த 4 வது அரை மாரத்தான் 16 மார்ச் 2025 அன்று புதுதில்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 21 கி.மீ, 10 கி.மீ மற்றும் 5 கி.மீ ஆகிய மூன்று மாரத்தான் பந்தய பிரிவுகள் இடம்பெற்றன.
இது 10 முதல் 60 வயது வரையிலான அனைத்து வயதினரிடமும் உடல் தகுதி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டது. இந்த அரை மாரத்தான் போட்டியில் 833 ஆண்கள், 239 பெண்கள் என மொத்தம் 1,072 பேர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாராலிம்பிக் தடகள வீரர் திரு பிரவீன் குமார், பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112648
***
TS/PLM/AG/KR
(रिलीज़ आईडी: 2112702)
आगंतुक पटल : 32