சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கான வெளிநாட்டு கல்வி உதவித்தொகை
Posted On:
18 MAR 2025 2:08PM by PIB Chennai
கடந்த பத்து ஆண்டுகளில் ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பதற்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகமும் தேசிய வெளிநாட்டு உதவித்தொகையை வழங்கி வருகின்றன. அதன்படி, கடந்த பத்து ஆண்டுகளில் மொத்தம் 1037 ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களும், 194 பழங்குடியின மாணவர்களும் பயன் பெற்றுள்ளனர்.
கடந்த 2023-24-ம் ஆண்டில் 117 ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும், 23 பழங்குடியின மாணவர்களுக்கும் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வெளிநாடுகளில் 263 ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களும், 39 பழங்குடியின மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.
ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்காக குடும்ப வருமான உச்சவரம்பு, கல்வி இடங்களின் எண்ணிக்கை மற்றும் நிதி உதவித் தொகையை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் எடுத்து வருகிறது.
இந்தத் தகவலை மக்களவையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அதவாலே எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2112162)
TS/GK/AG/KR
(Release ID: 2112235)
Visitor Counter : 22