பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை செயலாளர் திரு வி சீனிவாஸ் தலைமையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஓய்வூதியதாரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted On: 18 MAR 2025 11:31AM by PIB Chennai

பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் வழிகாட்டுதலின்படி, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் "வாழ்க்கையை எளிதாக்குவது" என்ற அடிப்படையில் மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, ஓய்வூதியம் தொடர்பான செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட  பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் ஓய்வூதிய இணையதளங்களை ஒருங்கிணைத்து ஒற்றை போர்ட்டல் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு தடையற்ற வங்கிச் சேவைகளை  வழங்க உள்ளது.

ஓய்வூதியம் வழங்குவதில்  வங்கிகள்  முக்கிய பங்காற்றுவதால், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையானது வங்கிகளின் மத்திய ஓய்வூதிய செயலாக்க மையங்கள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பணிகளைக் கையாளும் வங்கி களப் பணியாளர்களுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பயிற்சிகளை நடத்தி வருகிறது. மேலும், ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக இத்துறை பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்த ஓய்வூதியம் பெறுவோர் பெருமளவில் வசிக்கும் பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஏற்பாடு செய்கிறது.

***

(Release ID: 2112095)

TS/GK/AG/KR

 


(Release ID: 2112167) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi , Bengali