ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: மாநிலங்களில் குடிநீர் விநியோகம்
Posted On:
17 MAR 2025 4:49PM by PIB Chennai
நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் போதுமான அளவில், பரிந்துரைக்கப்பட்ட தரத்தில், பாதுகாப்பான குழாய் நீர் வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, மத்திய அரசு ஆகஸ்ட் 2019 முதல் மாநிலங்களுடன் இணைந்து ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்துகிறது. குடிநீர் என்பது ஒரு மாநில விஷயமாகும். எனவே, ஜல் ஜீவன் செயல்பாட்டுப் பொறுப்பு மாநில / யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்கி உதவுகிறது.
ஜல்-ஜீவன் திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச நீர் விநியோகம் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு மாநிலங்களில் குடிநீர் ஆதாரங்கள் கிடைப்பதைப் பொறுத்து அதை உயர்த்திக் கொள்ளலாம். ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீருக்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கி நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2111975)
Visitor Counter : 13