ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: ஜல் -ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்பு

प्रविष्टि तिथि: 17 MAR 2025 4:50PM by PIB Chennai

நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் போதுமான அளவில், பரிந்துரைக்கப்பட்ட தரத்தில், பாதுகாப்பான குழாய் நீர் வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, மத்திய அரசு ஆகஸ்ட் 2019 முதல் மாநிலங்களுடன் இணைந்து செயல்படுத்த ஜல் ஜீவன் இயக்கத்தை அறிமுகப்படுத்தியது. குடிநீர் என்பது செயல்பாட்டுப் பொறுப்பு மாநில / யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்கி உதவுகிறது.

ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீருக்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கி நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2019-ல் 3.23 கோடி (16.71%) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குழாய் நீர் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை, 12.03.2025 நிலவரப்படி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் அறிவிக்கப்பட்டபடி, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் சுமார் 12.28 கோடி கூடுதல் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 12.03.2025 நிலவரப்படி, நாட்டில் உள்ள 19.36 கோடி கிராமப்புற வீடுகளில், குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.  

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PLM/AG/DL


(रिलीज़ आईडी: 2111970) आगंतुक पटल : 60
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali