ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: ஆந்திராவில் ஜல் ஜீவன் இயக்க செயல்பாடுகள்
Posted On:
17 MAR 2025 4:51PM by PIB Chennai
ஆகஸ்ட் 2019 முதல், நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் போதுமான அளவில், பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து ஜல் ஜீவன் இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்ட நேரத்தில், ஆந்திராவில், 30.74 லட்சம் (32.18%) கிராமப்புற வீடுகளில் குழாய் நீர் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இப்போது ஆந்திராவில் கூடுதலாக 39.77 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 11.03.2025 வரை மாநிலத்தில் உள்ள 70.51 லட்சம் (73.81%) ஊரக வீடுகளுக்கு குழாய் நீர் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/KR/DL
(Release ID: 2111965)
Visitor Counter : 13