பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய அமைச்சகங்கள் / துறைகளின் 2025 பிப்ரவரி மாதத்திற்கான நடவடிக்கைகள் குறித்த பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் 34வது மாதாந்திர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
Posted On:
17 MAR 2025 11:34AM by PIB Chennai
மத்திய அமைச்சகங்கள் / துறைகளின் 2025 பிப்ரவரி மாதத்திற்கான நடவடிக்கைகள் குறித்த பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் 34வது மாதாந்திர அறிக்கையை பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ளது. 2025 பிப்ரவரி மாதத்தில் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 1,11,392 பொதுமக்கள் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டிருந்தன. 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 22 வரை மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் சராசரி குறைதீர்ப்பு காலம் 15 நாட்களாக இருந்துள்ளது. 2025 பிப்ரவரி மாதத்தில் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு இணையதளத்தில் 47,599 புதிய பயனாளர்கள் பதிவு செய்தனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 7,312 பயனர்கள் பதிவு செய்தனர்.
2025 பிப்ரவரி மாதத்தில் இந்த இணையதளம் மூலம் 1,12,389 பொதுமக்கள் குறைகள் பெறப்பட்டன. அவற்றில் 1,11,392 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டன. பிப்ரவரி 28 அன்றைய நிலவரப்படி 59,946 பொதுமக்கள் குறைகள் நிலுவையில் உள்ளன. 12,649 மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. 15,399 மேல் முறையீடுகளுக்கு தீர்வு காணப்பட்டன. மத்திய செயலகத்தில் 2025 பிப்ரவரி மாத நிலவரப்படி 22,410 பொதுமக்கள் குறைதீர்ப்பு மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்ழ் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111701
***
TS/IR/LDN/KR
(Release ID: 2111761)
Visitor Counter : 16