குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் -குடியரசு துணைத் தலைவர்
Posted On:
13 MAR 2025 7:13PM by PIB Chennai
ஹோலி பண்டிகையையொட்டி, குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியையும், வசந்த காலத்தின் வருகையையும் குறிப்பதாக ஹோலி பண்டிகை உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்தப் பண்டிகை புதிய தொடக்கத்தையும், வளத்தையும் குறிப்பதாகவும் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பாரம்பரியத்தைக் கொண்டாடும் அதேவேளையில், வண்ணமயமான ஹோலி பண்டிகை ஒற்றுமை உணர்வுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் கூறியுள்ளார். ஹோலிப் பண்டிகையின் பல விதமான வண்ணங்கள் நாட்டின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை நினைவூட்டுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஹோலிப் பண்டிகை நமது எண்ணங்களை கருணை உணர்வுடனும், இரக்கத்துடனும், தேசத்திற்கான நம்பிக்கையுடனும் வண்ணமயமான ஒரு நினைவூட்டலாக இருக்கட்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
***
TS/SV/RJ/DL
(Release ID: 2111306)
Visitor Counter : 20