சுரங்கங்கள் அமைச்சகம்
துரப்பணப் பணிகள் உரிம ஏலத்தை முதல்முறையாக சுரங்கங்கள் அமைச்சகம் நாளை நடத்தவுள்ளது
Posted On:
12 MAR 2025 3:25PM by PIB Chennai
துரப்பணப் பணிகள் உரிம ஏலத்தை முதல்முறையாக சுரங்கங்கள் அமைச்சகம் நாளை கோவாவில் நடத்தவுள்ளது. இது இந்தியாவின் வெளிப்படுத்தப்படாத முக்கியமான கனிம வளங்களைக் கண்டறிதலில் மிக முக்கிய சீர்திருத்த நடவடிக்கையாகும்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
முதல் கட்டத்தில் அரிய கனிம வகைகள், துத்தநாகம், வைரம், செம்பு, பிளாட்டின வகை கனிமங்கள் போன்ற கனிமங்களுக்கான 13 கண்டறிய வேண்டிய பகுதிகள் இணையதளம் மூலம் வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும். ஏலத்திற்கான ஆவணங்கள், எம்எஸ்டிசி ஏல தளத்தில் 2025 மார்ச் 20 முதல் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110761
***
TS/SMB/RJ/ DL
(Release ID: 2111031)
Visitor Counter : 11