உள்துறை அமைச்சகம்
சைபர் கிரைம் போர்ட்டல்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAR 2025 4:15PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி 'காவல்துறை' மற்றும் 'பொது ஒழுங்கு' ஆகியவை மாநில அரசுக்கு உட்பட்ட அம்சங்களாகும். சட்ட அமலாக்க முகமைகள் மூலம் சைபர் குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுப்பது, கண்டுபிடிப்பது, புலனாய்வு செய்வது, வழக்குத் தொடர்வது, காவல் நிலையங்களின் செயல்திறனை மேம்படுத்துவது ஆகியவை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முதன்மையான பொறுப்பாகும். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முன்முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆலோசனைகள், பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவி அளிப்பதன் மூலம் அவற்றின் திறனை மேம்படுத்த உதவுகிறது.
சைபர் குற்றங்களை விரிவான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் கையாள்வதற்கான நடைமுறையை வலுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் ஒருங்கிணைந்து கையாள்வதற்காக 'இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தை' உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து வகையான கணினிசார் குற்றங்கள் தொடர்பான சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக, 'தேசிய கணினிசார் குற்றங்கள் புகார் இணையதளம்' (https://cybercrime.gov.in) தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் புகாரளிக்கப்பட்ட சைபர் குற்ற சம்பவங்கள், அவற்றை முதல் தகவல் அறிக்கைகளாக மாற்றுதல் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகள் சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட மாநில / யூனியன் பிரதேச சட்ட அமலாக்க முகமைகளால் கையாளப்படுகின்றன. அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்துகின்றன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
TS/SV/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2111015)
வருகையாளர் எண்ணிக்கை : 60