கூட்டுறவு அமைச்சகம்
தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களை கணினிமயமாக்குதல்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAR 2025 3:34PM by PIB Chennai
ரூ.2,516 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்பாட்டில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களையும், நிறுவன வள திட்டமிடல் அடிப்படையிலான பொதுவான தேசிய மென்பொருளின் கீழ் கணினி மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை மாநில மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் நபார்டு வங்கியுடன் இணைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 67,930 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 27.01.2025 நிலவரப்படி, 50,455 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் நிறுவன வள திட்டமிடல் மென்பொருள் (இ.ஆர்.பி.) மூலம் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தெரிவு செய்யப்பட்ட 4,532 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் 4,529 சங்கங்கள் கணினி மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
TS/SV/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2110969)
வருகையாளர் எண்ணிக்கை : 52