உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் கைது மோசடிகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கை

Posted On: 12 MAR 2025 4:19PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி 'காவல்துறை' மற்றும் 'பொது ஒழுங்கு' ஆகியவை மாநில விவகாரங்கள் ஆகும். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்கள் சட்ட அமலாக்க முகமைகள் மூலம் இணையவழி குற்றம் மற்றும் டிஜிட்டல் கைது மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, கண்டுபிடிப்பது, புலனாய்வு செய்வது மற்றும் வழக்குத் தொடரவேண்டும் .இவை இவற்றின் முதன்மையான பொறுப்பாகும். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முன்முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆலோசனைகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவி அளிக்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் குற்றங்கள் குறித்த புள்ளிவிவர தரவுகளைத் தொகுத்து "இந்தியாவில் குற்றம்" என்ற தனது ஆண்டு அறிக்கையை வெளியிடுகிறது.  2022-ம் ஆண்டுக்கான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பான குறிப்பிட்ட தரவு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் தனித்தனியாக பராமரிக்கப்படவில்லை.

டிஜிட்டல் கைது மோசடிகள் உள்ளிட்ட கணினி குற்றங்களைக் கையாள்வதற்கான நடைமுறையை விரிவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான இணையவழி குற்றங்களையும் ஒருங்கிணைந்து கையாள்வதற்காக 'இந்திய இணையவழி குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தை' உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

டிஜிட்டல் கைது மோசடிகள் குறித்த விரிவான விழிப்புணர்வு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது; செய்தித்தாள் விளம்பரம், டெல்லி மெட்ரோக்களில் அறிவிப்பு, சிறப்பு இடுகைகளை உருவாக்க சமூக ஊடக செல்வாக்காளர்களைப் பயன்படுத்துதல், பிரசார் பாரதி மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் பிரச்சாரம், ஆகாஷ்வாணி சிறப்பு நிகழ்ச்சி மற்றும் 27.11.2024 அன்று புதுதில்லி கன்னாட் பிளேஸில் நடந்த ராககிரி விழாவில் பங்கேற்றது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் 27.10.2024 அன்று "மனதின் குரல்" நிகழ்ச்சியில் டிஜிட்டல் கைதுகள் குறித்து  நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார்.

இணையவழி குற்றம் உதவி எண் 1930 மற்றும் ' தேசிய இணையவழி குற்றம் தகவல் இணையதளம்’ (என்.சி.ஆர்.பி) ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தொலைத் தொடர்புத் துறையுடன் இணைந்து அழைப்பாளர் ஒலி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. அழைப்பாளர் ஒலி பிராந்திய மொழிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது, தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் ஒரு நாளைக்கு 7-8 முறை வழங்கப்படுகிறது.

28.02.2025 வரை 7.81 லட்சம் சிம் கார்டுகளும், 2,08,469 ஐஎம்இஐ களும் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.

***

TS/IR/RR/KR/DL


(Release ID: 2110961) Visitor Counter : 43