தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இஸ்போர்ட்ஸ் போட்டி

Posted On: 11 MAR 2025 6:51PM by PIB Chennai

இந்தியாவின் வேகமாக விரிவடைந்து வரும் இஸ்போர்ட்ஸ் துறையில் இஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் முக்கிய பங்கு வகிக்கிறது, சிறந்த வீரர்களை மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிட ஒன்றிணைக்கிறது. இந்திய இஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2025 உலக ஆடியோ விஷுவல் & பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் (வேவ்ஸ்) முக்கிய அங்கமாகும். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஆதரவுடன், இது புதுமைகளை வெளிப்படுத்துவதற்கும், திறமைகளை வளர்ப்பதற்கும், இந்தியாவில் இஸ்போர்ட்ஸின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும் ஒரு விதிவிலக்கான தளத்தை வழங்குகிறது.

 

15.02.2025 நிலவரப்படி, மொத்தம் 35,008 பங்கேற்பாளர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இஃபுட்பால் மற்றும் உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் ( டபிள்யூ.சி.சி) இடம்பெறும் இஸ்போர்ட்ஸ் போட்டிகள் தொகுதிகளாக நடத்தப்படுகின்றன. இறுதி சாம்பியன்கள் வேவ்ஸ்  மாநாட்டின்போது  அறிவிக்கப்படுவார்கள்.

 

இஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் இந்தியாவின் வளர்ந்து வரும் இஸ்போர்ட்ஸ் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க  முயற்சியைக் குறிக்கிறது. வேவ்ஸ் மாநாட்டின்ஒரு பகுதியாக, இது உலகளாவிய இஸ்போர்ட்ஸ்  சூழலில் இந்தியாவின் பங்கை எடுத்துக்காட்டுகிறது. பங்கேற்பாளர்களுக்கு உற்சாகமான  வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுடன், அடுத்த தலைமுறை இஸ்போர்ட்ஸ் சாம்பியன்களை ஊக்குவிக்கவும், இந்தியாவில் பொழுதுபோக்குத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கவும்  தீவிரமாக உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110410

***

 

RB/DL


(Release ID: 2110554) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi , Kannada