ஜவுளித்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: ஜவுளி பூங்காக்கள் விருதுநகர் உள்பட 7 இடங்களில் ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
11 MAR 2025 12:17PM by PIB Chennai
2021-22 முதல் 2027-28 வரை 4,445 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன், தமிழ்நாடு (விருதுநகர்), தெலுங்கானா (வாரங்கல்), குஜராத் (நவ்சாரி), கர்நாடகா (கலபுராகி), மத்தியப் பிரதேசம் (தார்), உத்தரப் பிரதேசம் (லக்னோ), மகாராஷ்டிரா (அமராவதி) ஆகிய 7 இடங்களை பிஎம் மித்ரா ஜவுளி பூங்காக்களை அமைப்பதற்காக அரசு இறுதி செய்துள்ளது..
ஜவுளித் தொழிலின் ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலிக்கான ஒருங்கிணைந்த பெரிய அளவிலான மற்றும் நவீன தொழில்துறை உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன், கிரீன்ஃபீல்ட்/பிரவுன்ஃபீல்ட் தளங்களில் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி மற்றும் ஆயத்த ஆடை( பிஎம் மித்ரா) பூங்காக்களை அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நூற்பு, நெசவு, பதப்படுத்துதல் மற்றும் அச்சிடுதல் முதல் ஆடை உற்பத்தி வரை பண்ணை முதல் இழை வரை; இழை முதல் தொழிற்சாலை; தொழிற்சாலை முதல் வடிவமைப்பு (ஃபேஷன்) வரை; வடிவமைப்பு முதல் வெளிநாடு வரை என்ற 5 அம்சப் பார்வையுடன் ஒருங்கிணைந்த ஜவுளி மதிப்புக் கூட்டல் சங்கிலியை உருவாக்கும் வாய்ப்பை வழங்கும்.
ஒவ்வொரு பிஎம் மித்ரா பூங்காவும் நூற்பு, நெசவு, பதப்படுத்துதல், அச்சிடுதல், ஆடை மற்றும் பாகங்கள் உற்பத்தி உட்பட ஜவுளி மதிப்பு சங்கிலியின் அனைத்து கூறுகளிலும் 3 லட்சம் (நேரடி/மறைமுக) வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தகவலை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2110126)
TS/PKV/RR/KR
(Release ID: 2110195)
Visitor Counter : 17