உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவுப் பாதுகாப்பு மற்றும் புதுமைகளை மேம்படுத்துதல்: ஆஹார்-2025 இன் முக்கிய நன்மைகள்

Posted On: 11 MAR 2025 11:46AM by PIB Chennai

மத்திய உணவு பதனப்படுத்துதல்  தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், ஆஹார்-2025-ஐ,  மார்ச் 4 அன்று புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தார். இதன் தொடக்க அமர்வில் அமைச்சர் உரையாற்றும் போது உலகில் உள்ள ஒவ்வொரு சாப்பாட்டு மேசையிலும் குறைந்தது  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு உணவு இருக்க வேண்டும் என்ற எங்கள் பார்வை தெளிவானதாக உள்ளது என்றார். உணவு பதப்படுத்துதலை விரிவுபடுத்துவதன் மூலம், இந்திய சுவைகள், தரம் மற்றும் புதுமை ஆகியவை உலகின் ஒவ்வொரு மூலையிலும் சென்றடைவதை உறுதி செய்யலாம் என்றும் அமைச்சர் கூறினார். உணவு பதனப்படுத்தல் தொழில்கள் அமைச்சகம்

2025 செப்டம்பர் 25-28 வரை  மிகப்பெரிய உலகளாவிய உணவு உச்சி மாநாட்டை நடத்த உள்ளது‌. ஆஹார் முதல் உலக உணவு இந்தியா 2025-க்கான பயணம் இன்று தொடங்குகிறது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

 ஆஹார் -2025 இன் உத்வேகத்தைத் தொடர்ந்து, உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்  தொடர்ச்சியான தாக்கமிக்க தொழில்நுட்ப அமர்வுகளை ஏற்பாடு செய்தது. இது இந்தியாவின் உணவு சுற்றுச்சூழல் அமைப்பின் எதிர்காலத்தை பட்டியலிட அரசு, கல்வியாளர்கள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் தொழில்துறையின் முன்னணி குரல்களை ஒன்றிணைத்தது. இரண்டு நாட்கள் நுண்ணறிவு கலந்த விவாதங்களில், நிபுணர்கள் உணவு பதப்படுத்துதல், இயந்திரங்கள், பேக்கேஜிங், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளில் புதுமைகளை ஆராய்ந்தனர்.

"சிறந்ததை உறுதி செய்தல்: உணவுப் பாதுகாப்பு, தரம் மற்றும் கண்டறியக்கூடிய தன்மை" என்ற தலைப்பில், உணவுப் பதனப்படுத்துதல் அமைச்சக செயலாளர் சுப்ரதா குப்தா, ரசாயன மாசுபாட்டின் ஆபத்துகள் மற்றும் அவற்றின் நீடித்த ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தினார். "விவசாயத்தில் ரசாயனங்களின் நிலையான மற்றும் பொறுப்பான பயன்பாடு குறித்து நமது விவசாயிகளுக்கு  கற்பிப்பது கட்டாயமாகும், ஏனெனில் இது நாம் உட்கொள்ளும் உணவின் பாதுகாப்பை நேரடியாகப் பாதிக்கிறது" என்று டாக்டர். குப்தா வலியுறுத்தினார்.

2ஆம் நாள் அமர்வைத் தொகுத்து, தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு நிறுவனத்தின் இயக்குனர் ஹரிந்தர் சிங் ஓபராய், வெளிப்படையான, தொழில்நுட்பம் சார்ந்த உணவு முறையை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். "உணவுப் பாதுகாப்பின் எதிர்காலம், பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு  போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணக்க கண்காணிப்பு, கண்டறியக்கூடிய தன்மை மற்றும் தர உத்தரவாதம் ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்துகிறது" என்று டாக்டர். ஓபராய் குறிப்பிட்டார். பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் நுகர்வோர் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும் தொடர்ச்சியான அறிவுப் பரிமாற்றம், தொழில்துறை ஒத்துழைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை முன்னேற்றங்கள் இன்றியமையாதவை என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக்குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110092

 

***

TS/IR/RR/KR

 


(Release ID: 2110157) Visitor Counter : 23