ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்ற வினா: குறைந்துவரும் நிலத்தடி நீர்மட்டம்
Posted On:
10 MAR 2025 5:54PM by PIB Chennai
தண்ணீர் என்பது மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், நிலத்தடி நீர் ஆதாரங்களின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதும், நிர்வகிப்பதும் மாநில அரசுகளின் முதன்மையான பொறுப்பாகும். இருப்பினும் மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் தொழில்நுட்ப மற்றும் நிதி சார்ந்த உதவியை மாநில அரசுகளுக்கு செய்கிறது. நிலத்தடி நீர் ஆதாரம் குறைவதை கட்டுப்படுத்த மத்திய ஜல்சக்தி அமைச்சகமும் இதர அமைச்சகங்களும் முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
நிலத்தடி நீரை சேமிப்பது, நீடிக்கவல்ல நடைமுறைகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் உட்பட விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஏற்பாடு செய்கிறது.
சமூக ஈடுபாட்டுடன் 2019 முதல் ஜல்சக்தி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தண்ணீர் தொடர்பான தகவல்களை உள்ளூர் சமூகங்களுக்கு எடுத்துரைக்க நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்சக்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நிலத்தடி நீர் ஆதாரம் குறைவது தடுக்கப்படுகிறது. 2017-க்கும் 2024க்கும் இடைபட்ட காலத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் 433 பில்லியன் கனமீட்டர் என்பதில் இருந்து 446.90 பில்லியன் கனமீட்டராக அதிகரித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு ராஜ்பூஷன் சௌத்ரி இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109947
***
SMB/LDN/DL
(Release ID: 2110009)
Visitor Counter : 25