நிலக்கரி அமைச்சகம்
சுத்திகரிக்கப்பட்ட சுரங்கத் தண்ணீரின் நீடித்த மற்றும் பாதுகாப்பான பயன்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
10 MAR 2025 3:45PM by PIB Chennai
இந்திய நிலக்கரி நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பொருத்தமான சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்க குடிநீர், பாசனம், தொழில் துறை பயன்பாடு ஆகியவற்றுக்கு சுத்திகரிக்கப்பட்ட சுரங்க தண்ணீரின் பயன்பாட்டை நிலக்கரி அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது.
குடிநீர் நோக்கங்களுக்காக வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சுரங்க தண்ணீரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை உறுதிசெய்ய இந்திய தர நிர்ணய அமைவனம், மத்திய நிலத்தடி நீர் ஆணையம் போன்றவற்றின் விதிமுறைகளுக்கு ஏற்ப, தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வண்டல் படிவு, வடிகட்டுதல், தொற்று நீக்குதல் போன்ற சுத்திகரிப்பு நடைமுறைகள் விநியோகத்திற்கு முன் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த தகவலை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இன்று மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109867
-----
TS/SMB/LDN/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2109983)
வருகையாளர் எண்ணிக்கை : 46