கலாசாரத்துறை அமைச்சகம்
பண்டைய இந்திய அறிவு மையங்களை மீட்டெடுத்தல்
Posted On:
10 MAR 2025 3:20PM by PIB Chennai
நாளந்தா, தக்ஷசீலா, விக்ரமசீலா போன்ற பண்டைய அறிவு மையங்கள் வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் பல அழிவு முயற்சிகளை எதிர்கொண்டன. இந்தத் தாக்குதல்கள் இருந்தபோதிலும், அறிவு தன்னைத் தானே பல்வேறு வழிகளில் தக்க வைத்துக் கொண்டது:
வாய்மொழிப் பாரம்பரியம் மற்றும் குரு-சிஷ்ய பரம்பரை
பல பண்டைய கல்வி நிறுவனங்கள் வாய்மொழி அறிவு பரிமாற்றத்தை பெரிதும் நம்பியிருந்தன. பௌதீக மையங்கள் அழிக்கப்பட்ட பிறகும், அறிவானதூ அறிஞர்களால் பாதுகாக்கப்பட்டு, நேரடி ஆசிரியர்-மாணவர் உறவுகள் மூலம் தலைமுறை தலைமுறையாக பரிமாறிக்கொள்ப்பட்டது.
அறிஞர்களின் இடப்பெயர்வு
நாளந்தா, விக்ரமசீலா போன்ற நிறுவனங்கள் தாக்கப்பட்டபோது, அறிஞர்கள் தங்கள் அறிவை தங்களுடன் எடுத்துச் சென்று, வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றனர். பலர் தென்னிந்தியா, திபெத், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு குடிபெயர்ந்தனர், அவர்களின் போதனைகள் பாதுகாக்கப்பட்டு பரவுவதை உறுதி செய்தனர்.
மத நிறுவனங்கள் மற்றும் மடாலயங்கள்
பௌத்த மற்றும் இந்து மடாலயங்கள், கோயில்களுடன் சேர்ந்து, இரண்டாம் நிலை அறிவு மையங்களாக செயல்பட்டன. துறவிகளும் அறிஞர்களும் ரகசியமாகவோ அல்லது பிற பாதுகாப்பான இடங்களிலோ தங்கள் பணியைத் தொடர்ந்தனர். உதாரணமாக, திபெத்திய பௌத்த மடாலயங்கள் இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சியடைந்தபோது இந்திய நூல்களையும் மரபுகளையும் பாதுகாத்தன.
வெளிநாட்டு மொழிபெயர்ப்புகள் மற்றும் பதிவுகள்
படையெடுப்பாளர்கள் நூலகங்களை அழித்தபோது, யுவான்சாங் மற்றும் அல்-பிருனி போன்ற வெளிநாட்டு பயணிகள் இந்தியாவின் பண்டைய ஞானத்தின் பெரும்பகுதியை ஆவணப்படுத்தினர். பல இந்திய நூல்கள் சீன, அரபு மற்றும் பாரசீக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன, இது இந்தியாவுக்கு வெளியே அறிவைப் பாதுகாக்க உதவியது.
ஓலைச்சுவடிகள் மற்றும் ரகசிய நூலகங்கள்
சில அறிஞர்கள் கையெழுத்துப் பிரதிகளை தொலைதூர இடங்களிலோ அல்லது ரகசிய களஞ்சியங்களிலோ மறைத்து வைத்தனர். இன்றும், கோயில்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளில் பண்டைய நூல்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுகின்றன.
கற்றலின் மறுமலர்ச்சி
அழிவுக்குப் பிறகும், இந்தியா கற்றலில் பல மறுமலர்ச்சிகளைக் கண்டது. வாரணாசி, காஞ்சிபுரம் போன்ற புதிய அறிவு மையங்கள் தோன்றி, அறிவார்ந்த மரபுகளைத் தொடர்ந்தன.
பிற கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைத்தல்
இந்திய கணித, அறிவியல் மற்றும் தத்துவ அறிவு இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய அறிஞர்களால் உள்வாங்கப்பட்டது. தசம முறை மற்றும் ஆயுர்வேதம் போன்ற கருத்துக்கள் உலகளாவிய நாகரிகங்களில் நுழைந்தன, நிறுவன அழிவு இருந்தபோதிலும் அவற்றின் உயிர்வாழ்வை உறுதி செய்தன.
இவ்வாறு, பண்டைய அறிவு மையங்கள் தாக்கப்பட்டபோது, அவற்றின் அறிவுசார் மற்றும் கலாச்சார மரபு எதையும் தாங்கி நிற்கும் திறன், சூழலுக்குத் தக ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் அறிவின் பரவல் மூலம் நீடித்தது.
இந்தியாவின் பண்டைய அறிவு அமைப்புகள் மற்றும் மையங்களை புதுப்பிக்கவும் மீட்டெடுக்கவும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் (ஐ.ஜி.என்.சி.ஏ) பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
விரிவான முயற்சிகள் மூலம், இந்திரா காந்தி தேசிய மையம் பண்டைய அறிவு அமைப்புகள் குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, அவற்றின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109847
***
TS/PKV/AG/DL
(Release ID: 2109963)
Visitor Counter : 17