சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் கல்வியறிவு விகிதம் 9.4 சதவீதம் அதிகரித்துள்ளது

Posted On: 10 MAR 2025 3:41PM by PIB Chennai

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முஸ்லிம்களின் கல்வியறிவு விகிதம் 59.1% ஆகவும், அதே வயதினருக்கான அகில இந்திய கல்வியறிவு விகிதம் 64.8% ஆகவும் இருந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் கல்வியறிவு விகிதம் 68.5% ஆகும். அகில இந்திய கல்வியறிவு விகிதம் 73.0% ஆகும். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களிடையே கல்வியறிவு விகிதம் 9.4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆண்டு அறிக்கையான, பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே, 2023-24 படி, முஸ்லிம்களிடையே கல்வியறிவு விகிதம் 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 79.5% ஆகவும், அதே வயதினருக்கான அனைத்து மதங்களைச் சேர்ந்தோரின் கல்வியறிவு விகிதம் 80.9% ஆகவும் உள்ளது.

அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை சமூகங்களான புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், சமணர்கள், முஸ்லிம்கள், பார்சிகள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோரின் நலன் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்கும் பணியை சிறுபான்மையினர் நல அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. கல்வி அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதார அதிகாரமளித்தல், சிறப்புத் தேவைகளை நிறைவேற்றுதல் மற்றும் சிறுபான்மை நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி சிறுபான்மை சமூகங்களின் வளர்ச்சிக்கான உத்தியை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்தார்

-----

(Release ID 2109862

TS/IR/KPG/KR


(Release ID: 2109905) Visitor Counter : 28


Read this release in: Hindi , Bengali , English , Urdu