பாதுகாப்பு அமைச்சகம்
முன்னாள் படைவீரர்களின் விதவைகளுக்கான நலத்திட்டங்கள்
Posted On:
10 MAR 2025 3:17PM by PIB Chennai
2024 டிசம்பர் 31, நிலவரப்படி நாட்டில் உள்ள முன்னாள் படைவீரர்களின் விதவைகளின் எண்ணிக்கை 7,40,766 ஆகும். இது குறித்த மாநில / யூனியன் பிரதேச வாரியான தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 58,283 முன்னாள் படை வீரர்களின் விதவைகளும், புதுச்சேரியில் 886 முன்னாள் படை வீரர்களின் விதவைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
விதவைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஊதியக்குழு பரிந்துரை மற்றும் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில், குடும்ப ஓய்வூதியம் மறு ஆய்வு செய்யப்படுகிறது. அகவிலைப்படி நிவாரணம் அவ்வப்போது மதிப்பீடு செய்யப்பட்டு சேர்த்துக் கொள்ளப்பட்டால், அது வழங்கப்படும் தொகையில் அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம்.
போர் வீரர்களின் விதவைகள் மற்றும் ஆயுதப்படை வீரர்களின் குடும்பங்களுக்கான நலத்திட்டங்களை அரசு அவ்வப்போது ஆய்வு செய்கிறது.
மாநிலங்களவையில் இன்று திரு நிரஞ்சன் பிஷி, திருமதி சுலதா தியோ ஆகியோருக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109846
-----
TS/IR/KPG/KR
(Release ID: 2109900)
Visitor Counter : 24