தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS-95) நன்மைகள்
Posted On:
10 MAR 2025 2:47PM by PIB Chennai
ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டமானது பரந்த அளவிலான தற்செயல் செலவுகளை நிகழ்வுகளை சமாளிப்பது உள்ளிட்ட விரிவான நன்மைகளை வழங்குகிறது. இது உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வயதான காலத்தில் சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது. இபிஎஸ்- ன் கீழ் கிடைக்கும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத்தில் தொகை திரும்பப் பெறுதல் நன்மைகளின் பல்வேறு வகைகள் பின்வருமாறு:
58 வயதில் ஓய்வு பெறும் உறுப்பினர் ஓய்வூதியம்.
50 வயது முதல் முன்கூட்டிய உறுப்பினர் ஓய்வூதியம்.
பணிக்காலத்தில் நிரந்தர ஊனம் மற்றும் முழுமையான ஊனம் ஏற்பட்டால் ஊனம் ஓய்வூதியம்.
உறுப்பினர் அல்லது ஓய்வூதியதாரர் இறந்தால் விதவை / கணவனை இழந்தவர் ஓய்வூதியம்.
உறுப்பினர் இறக்கும் போது 2 குழந்தைகளுக்கு 25 வயது வரை குழந்தைகள் ஓய்வூதியம்.
அனாதைகள் ஓய்வூதியம் ஒரே நேரத்தில் 2 அனாதைகளுக்கு ஓய்வூதியம் 25 வயது வரை உறுப்பினர் ஒருவர் வாழ்க்கைத் துணை இல்லாத நிலையில் இறக்க நேரிட்டாலோ அல்லது வாழ்க்கைத் துணை இறந்துவிட்டாலோ வழங்கப்படுகிறது.
ஊனமுற்ற குழந்தைகள் / அனாதை ஓய்வூதியம் ஊனமுற்ற குழந்தை / அனாதை ஓய்வூதியம்.
உறுப்பினர் இறந்தவுடன் நியமனதாரர் ஓய்வூதியம் மற்றும் இபிஎஸ்-1995 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி குடும்பம் இல்லையென்றால் உறுப்பினரால் முறையாக நியமனம் செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் முழுவதும் செலுத்தப்படும்.
உறுப்பினரின் குடும்பம் அல்லது நியமனதாரர் இல்லாத பட்சத்தில் உறுப்பினர் இறந்த தந்தை/தாய்க்கு ஓய்வூதியம்.
பணியிலிருந்து விலகும் போது அல்லது வயது முதிர்வின் போது திரும்பப் பெறும் பயன் அளிக்கப்பட்ட உறுப்பினர் ஓய்வூதியத்திற்குத் தகுதியான சேவையை வழங்கியவராக இருத்தல் வேண்டும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு. ஷோபா கரந்தலஜே இதனைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2109829)
TS/PKV/AG/KR
(Release ID: 2109897)
Visitor Counter : 38