இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகளிர் தின சிறப்பு ஃபிட் இந்தியா சைக்கிள் பேரணி நாடு முழுவதும் நடைபெற்றது

Posted On: 09 MAR 2025 2:20PM by PIB Chennai

மார்ச் 9 அன்று ஃபிட் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மகளிர் தின பிங்க் சைக்ளோதான் பதிப்பிற்காக 400 -க்கும் மேற்பட்டவர்கள்  மேஜர் தியான்சந்த் தேசிய மைதானத்தில் கூடியதால், தேசிய தலைநகர் ஆற்றல் மற்றும் உற்சாகத்தை கண்டது. இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மனிஷா மவுன், முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான அங்கிதா பாம்ப்ரி, ஆகியோர் இந்தியா மற்றும் சர்வதேச சைக்கிள் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர்.

காலை நிகழ்வு விளையாட்டு, உடற்கல்வி, உடற்தகுதி மற்றும் ஓய்வு திறன் கவுன்சில்  மற்றும் இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு  ஆகியவற்றுடன் இணைந்து நடைபெற்றது.

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவால் தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் நிகழ்வு, டிசம்பர் 2024 முதல் நாடு முழுவதும் 4200 இடங்களை எட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டு மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில், பல்வேறு பிராந்திய மையங்களில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109617

*****

PKV /DL


(Release ID: 2109632) Visitor Counter : 31