தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
அனிமேஷன் திரைப்பட தயாரிப்பாளர்கள் போட்டி
அனிமேஷனில் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளைக் கொண்டாடுதல்
Posted On:
09 MAR 2025 12:05PM by PIB Chennai
அனிமேஷன் திரைப்பட இயக்குநர்கள் போட்டி என்பது அனிமேஷன் துறையில் இந்தியாவின் கதைசொல்லிகளை வெளிக்கொணரும் மற்றும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியாகும். இந்த நாடு தழுவிய போட்டியானது திரைப்பட இயக்குநர்களை அவர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை வெளிப்படுத்த அழைக்கிறது. மேலும் பார்வையாளர்களைக் கவரும் அசல் அனிமேஷன் திரைப்படங்களை வழங்குவதற்கான தளத்தை அவர்களுக்கு வழங்குகிறது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் , உலக ஆடியோ விஷுவல் & பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் (வேவ்ஸ்) ஒரு பகுதியாக இந்தப் போட்டியைத் தொடங்க அனிமேஷனில் முன்னணி சக்தியான டான்சிங் ஆட்டம்ஸ் உடன் இணைந்துள்ளது.
உலக ஆடியோ விஷுவல் & பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் (வேவ்ஸ்), அதன் முதல் பதிப்பில் ஒரு தனித்துவமான மையமாக உள்ளது. முழு ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் ஒருங்கிணைப்புக்கு தயாராக உள்ளது. இந்த நிகழ்வு ஒரு முதன்மையான உலகளாவிய நிகழ்வாகும். இது உலகளாவிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் கவனத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதையும், அதன் திறமையுடன் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையுடன் அதை இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உச்சிமாநாடு வரும் மே 1-4 வரை மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர் & ஜியோ வேர்ல்ட் கார்டன்ஸில் நடைபெறும். ஒளிபரப்பு & தகவல் பொழுதுபோக்கு , ஏவிஜிசி-எக்ஸ்ஆர், டிஜிட்டல் மீடியா & புத்தாக்கம், ஃபிலிம்ஸ்-வேவ்ஸ் ஆகிய நான்கு முக்கிய தூண்களை மையமாகக் கொண்டு, இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையின் எதிர்காலத்தை வெளிப்படுத்த, தலைவர்கள், படைப்பாளிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை ஒன்றிணைக்கும்.
அனிமேஷன் திரைப்பட இயக்குநர்கள் போட்டி என்பது அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ், எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி கட்டமைப்பின் தூண் 2-ன் கீழ் ஒரு முக்கிய முயற்சியாகும் 19 சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட குறிப்பிடத்தக்க 1,290 பங்கேற்பாளர்கள் தங்கள் உள்ளீடுகளைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த வலுவான போட்டியின் வளர்ந்து வரும் ஆர்வத்தையும் உலகளாவிய ஈர்ப்பையும் எடுத்துக்காட்டுகிறது.
போட்டிக்கான சமர்ப்பிப்பு காலம் 2024 செப்டம்பர் 10 அன்று தொடங்கி நவம்பர் 30 அன்று நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, தேர்வு மற்றும் வழிகாட்டுதல் சுற்றுகள் நடந்து வருகின்றன, இறுதித் தேர்வு ஏப்ரல் 2025 இல் அறிவிக்கப்படும். போட்டிக்கான முக்கிய காலக்கெடு கீழே உள்ளது:
* சமர்ப்பிக்கப்பட்டது: செப்டம்பர் 10, 2024
* சமர்ப்பிப்பு முடிந்தது: நவம்பர் 30, 2024
* வழிகாட்டுதல் கட்டம் 1: டிசம்பர் 2024
* தேர்வு சுற்று 1: டிசம்பர் 2024
* வழிகாட்டுதல் கட்டம் 2: ஜனவரி 2025
* தேர்வு சுற்று இரண்டு: ஜனவரி 2025
* வழிகாட்டுதல் & மாஸ்டர் வகுப்புகள்: பிப்ரவரி - மார்ச் 2025
* தேர்வு சுற்று மூன்று: பிப்ரவரி 2025
* இறுதித் தேர்வு: ஏப்ரல் 2025
* வேவ்சில் நேரில் வருகை மே 2025
அனிமேஷன் திரைப்பட இயக்குநர்கள் போட்டியானது அமெச்சூர் மற்றும் தொழில் வல்லுநர்கள் இருவரும் தங்கள் ஆக்கப்பூர்வமான யோசனைகளை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. பங்கேற்பாளர்கள் நிபுணர்களின் வழிகாட்டுதல், மாஸ்டர் வகுப்புகள் மற்றும் தொழில்துறை தலைவர்களுக்கு தங்கள் திட்டங்களை வழங்குவதற்கான வாய்ப்பு ஆகியவற்றிலிருந்து பயனடைவார்கள், உற்சாகமான பரிசுகள் மற்றும் உலகளாவிய வெளிப்பாடு வெற்றியாளர்களுக்கு காத்திருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்;
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109590
*****
PKV /DL
(Release ID: 2109619)
Visitor Counter : 24