இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கான உத்திகளை வகுக்கவும், 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் முயற்சியை வலுப்படுத்தவும் சிந்தனை முகாமில் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஆலோசனை நடத்தின
प्रविष्टि तिथि:
07 MAR 2025 5:32PM by PIB Chennai
லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறவுள்ள 2028 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான இந்தியாவின் முன்தயாரிப்பு மற்றும் 2036 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான நாட்டின் முயற்சியை வலுப்படுத்துதல் குறித்து கவனம் செலுத்த தெலுங்கானாவில் உள்ள கன்ஹா சாந்தி வனத்தில் நடைபெறும் இரண்டு நாள் சிந்தனை முகாமின் இன்றைய தொடக்க நிகழ்விற்கு மத்திய இளைஞர் நலன், விளையாட்டுகள், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டுத் துறை அமைச்சர்கள், மூத்த விளையாட்டு நிர்வாகிகள், முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் கள நிபுணர்களை ஒன்றிணைத்து யோசனைகளைப் பரிமாறி, இந்தியா உலகளாவிய விளையாட்டு சக்தியாக உருவெடுப்பதற்கான வரைபடம் பற்றி எடுத்துரைத்தார்.
2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கனவு கண்டுள்ளார் என்றும், இந்த லட்சியத்தை நனவாக்க மாநிலங்கள் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்றும் டாக்டர் மாண்டவியா வலியுறுத்தினார். "சிந்தனை முகாம் என்பது பிரதமரின் நல்லாட்சி என்ற தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் ஒரு முயற்சியாகும். இந்த முயற்சி ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நமது கனவை ஒத்துழைத்து முன்னெடுத்துச் செல்ல நமக்கு உதவுகிறது" என்று அவர் கூறினார்.
திறமையை அடையாளம் காணுதல், பயிற்சி முறைகள், விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டுகளின் நிலையான வளர்ச்சி போன்ற முக்கியமான துறைகள் குறித்த உரையாடலுக்கு சிந்தனை முகாம் வழிவகுக்கிறது. ஜம்மு காஷ்மீர், ஒடிசா, ஹரியானா, பீகார், கேரளா, உத்தராகண்ட், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் தங்கள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டனர். முன்னேற்றத்தை விரைவுபடுத்த ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை டாக்டர் மாண்டவியா வலியுறுத்தினார்.
இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு வளர்ப்பதில் கேலோ இந்தியா முன்முயற்சியின் தாக்கம் என்பது விவாதிக்கப்பட்ட ஒரு முக்கிய பகுதியாகும். 2,800க்கும் அதிகமான கேலோ இந்தியா அகாடமிகள் நிறுவப்பட்டுள்ளன என்றும், 1,045 கேலோ இந்தியா மையங்களில் 937 தற்போது செயல்பட்டு வருவதாகவும் டாக்டர் இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு வளர்ப்பதில் கேலோ இந்தியா முன்முயற்சியின் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்ட ஒரு முக்கிய பகுதி. 2,800க்கும் மேற்பட்ட கேலோ இந்தியா அகாடமிகள் நிறுவப்பட்டுள்ளன என்றும், 1,045 கேலோ இந்தியா மையங்களில் 937 தற்போது செயல்பட்டு வருவதாகவும் டாக்டர் மாண்டவியா குறிப்பிட்டார். திறமைகளைக் கண்காணிக்கவும், அமைப்பிற்குள் அவர்களின் வளர்ச்சியை உறுதி செய்யவும் தனித்துவமான அடையாள அட்டைகளுடன் கூடிய தேசிய தடகள வீரர்கள் களஞ்சியத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மாநிலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அமைச்சகங்கள் மற்றும் தனியார் துறையினர் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளிப்பதற்கு இந்த முகாம் முக்கிய கவனம் செலுத்தியது. அரங்கங்களையும் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்புகளையும் திறமையாகப் பயன்படுத்துவதன் அவசியத்தை விவாதங்கள் எடுத்துரைத்தன. அடித்தள நிலையிலான திறமையாளர் தேடலையும் பயிற்சியையும் அதிகரிக்க, தற்போதுள்ள பள்ளிகளை மேம்படுத்தி மாவட்ட அளவிலான விளையாட்டுப் பள்ளிகளை நிறுவுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாலையில், இசை, நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும், நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் உணர்வைக் கொண்டாடும், துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109135
***
TS/SMB/DL
(रिलीज़ आईडी: 2109205)
आगंतुक पटल : 54