உள்துறை அமைச்சகம்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஸ்ரீ விஸ்வேசதீர்த்த நினைவு மருத்துவமனையை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்
Posted On:
07 MAR 2025 4:38PM by PIB Chennai
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஸ்ரீ விஸ்வேசதீர்த்த நினைவு மருத்துவமனையை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெங்களூருவில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 150 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு சிறப்பு ஸ்ரீ விஸ்வேசதீர்த்த நினைவு மருத்துவமனை ரூ. 60 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். சமுதாயத்தில் ஏழைகள் மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு இலவச சிகிச்சைக்கான இந்த நவீன மையம் வரும் பல ஆண்டுகளுக்கு மக்களுக்கு சேவை செய்யும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த மருத்துவமனையில் 60 சதவீத படுக்கைகள் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மையம் பல்வேறு அதிநவீன சேவைகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஸ்ரீ கிருஷ்ண சேவா ஆசிரம அறக்கட்டளை எப்போதும் சமூகத்தின் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் சேவைக்காக பணியாற்றி வருவதாக திரு ஷா குறிப்பிட்டார்.
இந்த அறக்கட்டளை மதிப்பிற்குரிய ஸ்ரீ விஸ்வேசதீர்த்த சுவாமிஜியால் நிறுவப்பட்டது என்றும், இன்று அவருக்கு அடுத்து வந்த ஸ்ரீ விஸ்வபிரசந்தீர்த்த சுவாமிஜி இந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ மையம், ஸ்ரீ கிருஷ்ணா நேத்ராலயா, பல் மருத்துவ மையம் மற்றும் ஸ்ரீ விஷ்வபிரசந்தீர்த் நினைவு கிளினிக் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார். பெங்களூருவில் ஏழைகளுக்கு இந்த மையத்தை விட சிறந்த சிகிச்சை மையம் வேறு ஏதும் இருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
பெஜாவர் மடமானது கர்நாடகா மற்றும் தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் ஒரு முக்கிய மடமாக திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ விஸ்வேசதீர்த்தரின் தலைமையின் கீழ், பெஜாவர் மடம் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துதல், கட்டாய மதமாற்றங்களைத் தடுத்தல், ராம் மந்திர் இயக்கத்தை ஆதரித்தல் மற்றும் தென்னிந்தியா மற்றும் நாடு முழுவதும் இந்துத்துவா மற்றும் சனாதன தர்மத்திற்கு சேவை செய்தல் ஆகியவற்றில் நீண்டகால முயற்சிகளுக்காக நாடு முழுவதும் மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். உடுப்பியில் அமைந்துள்ள பெஜாவர் மடம் எட்டு மடங்களில் ஒன்றாகும் என்றும், ஸ்ரீ மத்வாச்சார்யாவின் போதனைகளைப் பின்பற்றி, கிருஷ்ணர் மீதான பக்திப் பாதையில் பலரை வழிநடத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்றும் திரு ஷா மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2109109
***
TS/PKV/AG/DL
(Release ID: 2109190)
Visitor Counter : 23