தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
உண்மை உரைக்கும் ஹேக்கத்தான் - செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியுடன் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுதல்
Posted On:
07 MAR 2025 11:42AM by PIB Chennai
இந்தியாவில் படையுங்கள் போட்டி - சீசன் 1-ன் ஒரு பகுதியான ட்ரூத்டெல் ஹேக்கத்தான்(உண்மை உரைக்கும் ஹேக்கத்தான்) சவால் போட்டியானது நேரடி ஒளிபரப்புகளின் போது நிகழ்நேர உண்மைச் சரிபார்ப்பிற்கான அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியுடன் செயல்படும் கருவிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா செல்லுலார் & எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன், மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் , மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்தியாஏஐ மிஷன் போன்ற முக்கிய நிறுவனங்களின் ஆதரவிலான இந்த ஹேக்கத்தான் போட்டி ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதுமைகளை வளர்ப்பதற்கு முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கிறது. இந்த முயற்சி தொடக்க வேவ்ஸ் (உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு) உச்சிமாநாட்டின் ஒரு முக்கிய அங்கமாகும்.
தவறான தகவல்களை எதிர்ப்பதற்கும் நெறிமுறை சார்ந்த ஊடகங்களை ஊக்குவிப்பதற்கும் ஏஐ-மூலம் இயங்கும் தீர்வை உருவாக்க ட்ரூத்டெல் (உண்மை விளம்பும்) ஹேக்கத்தான் பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. பங்கேற்பாளர்கள் தனித்தனியாக பங்கு பெறலாம் அல்லது டெவலப்பர்கள், தரவு விஞ்ஞானிகள் மற்றும் ஊடக வல்லுநர்கள் உட்பட 5 பேர் வரையிலான குழுக்களாகப் பங்கு பெறலாம்.
இந்த ஹேக்கத்தானுக்கு 2024, அக்டோபர் 1-ல் பதிவுகள் தொடங்கின. ஆலோசனைகளை சமர்ப்பிக்க 2025,பிப்ரவரி 21 கடைசி நாளாக இருந்தது. இப்போட்டியில் கலந்து கொள்ள சர்வதேச அளவில் 186 பேர் உட்பட, 5,650 பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். முதலிடம் பெற்ற 25 நபர்களின் பெயர்ப் பட்டியல் இன்று (மார்ச் 07) அறிவிக்கப்பட்டது. வழிகாட்டுதல் மற்றும் சரிபார்ப்பு 2025, மார்ச் 8 முதல் 18 வரை நடைபெறும். நடுவர்கள் முன் சமர்ப்பித்தல் மற்றும் 5 வெற்றியாளர்களைத் தேர்வு செய்தல் 2025, மார்ச் 24 முதல் 28 வரை நடைபெறும்.
வெற்றியாளர்களுக்கு 2025, மே 1 முதல் 4 வரை மும்பையில் நடைபெறவுள்ள வேவ்ஸ் (உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு) உச்சிமாநாட்டில் விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.5 லட்சம். இரண்டாம் பரிசு ரூ.2.5 லட்சம். மூன்றாம் பரிசு ரூ. 1.5 லட்சம். நான்காம், ஐந்தாம் பரிசுகள் ஒவ்வொன்றும் ரூ. 50,000 ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108997
***
TS/SMB/RJ
(Release ID: 2109145)
Visitor Counter : 19