சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை தேசிய கர்மயோகி மக்கள் சேவை திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது
Posted On:
06 MAR 2025 11:21AM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையானது தேசிய கர்மயோகி மக்கள் சேவை திட்டத்தின் முதல் தொகுப்புக் குழுவை வெற்றிகரமாக தொடங்கி வைத்தது. திறன் மேம்பாட்டு ஆணையத்தால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தீர்வு சார்ந்த, மக்களை மையமாகக் கொண்ட அரசு அதிகாரிகளிடையே சேவை மனப்பான்மையின் வலுவான உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் நான்கு குறுகிய பயிற்சி அமர்வுகள் (ஒவ்வொன்றும் சுமார் 1.5 மணி நேரம்) உள்ளன. இது வெளிப்படையான விவாதங்கள், குழுப்பணி மற்றும் சேவை சார்ந்த விவரிப்புகள் மூலம் நடைமுறை சிக்கலைத் தீர்ப்பதை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் தேசிய கர்மயோகி மக்கள் சேவை திட்டம் 2025 மார்ச் 5 முதல் 11 வரை புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு அமித் யாதவ் தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில் அரசு சேவையின் அடிப்படை நோக்கத்தை வலியுறுத்தினார். நம்மில் பலர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்துடன் பொதுச் சேவையில் நுழைகிறோம். இருப்பினும், காலப்போக்கில், அன்றாட நடைமுறைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட மக்கள் தொடர்பு ஆகியவை அந்த நோக்கதை வலுவிழக்கச் செய்து விடலாம். மக்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டுவர, நாம் ஏன் சேவை செய்கிறோம் என்பதை நினைவூட்டுவதாக இந்த நிகழ்ச்சி செயல்படுகிறது. அரசு ஊழியர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்கிறது என்று அவர் கூறினார்.
மேலும், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பொது சேவையில் சுய நிறைவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை திரு யாதவ் எடுத்துரைத்தார். மக்களுடன் கலந்துரையாடல் என்பது நிர்வாகத்தின் இதயமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், அதிகாரிகள் பொதுமக்களுடன் எவ்வாறு ஈடுபடுகிறார்கள், பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கிறார்கள் என்பது திறமையான நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108710
***
TS/PKV/RR/KR
(Release ID: 2108765)
Visitor Counter : 24